×

மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சீன தூதர் தகவல்

பெய்ஜிங்: மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

அத்துடன் ஜெய்ஷ் இ முகமது உள்பட தங்கள் மண்ணில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. ஐநா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து தடை விதிக்க கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா மட்டும் தடையாக இருந்தது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா கைவிட வேண்டும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் லூவோ சாவோஹி மசூத் அசார் மீதான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். சீனாவின் தடை தொழில்நுட்ப ரீதியானதுதான் என்றும் விளக்கம் அளித்துள்ள சீன தூதர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Azar ,Masood ,Chinese , Masood Azhar, soon settled in, is the Chinese ambassador
× RELATED மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன...