சென்னை மற்றும் புறநகரில் மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு : 2 பேர் கைது

சென்னை:  சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஜீனத் (70). கடந்த வாரம் வடபழனி பகுதியில் நடந்து சென்றபோது ஆட்டோவில் வந்த 2 பெண்கள், ஜீனத்திடம் பேச்சு கொடுத்து சென்றனர். பின்னர் அவரை ஆட்டோவில்  ஏற்றிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்றதும் மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து தப்பினர்.

புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது மதுரையை சேர்ந்த முத்தம்மாள் (35), முத்துமாரி (37), மீனா (28) ஆகியோர் என்பதும், சென்னை விரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில்  தங்கி வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் கோயம்பேடு பகுதியில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முத்தம்மாள் மற்றும் முத்துமாரி ஆகியோரை போலீசார் ேநற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீனாவை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chain ,suburbs ,Chennai , Chennai, suburbs, Chain flush , anthritis,arrested
× RELATED முகவரி கேட்பது போல் நடித்து வீட்டில்...