×

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜூக்காக 7 தொகுதியை தியாகம் செய்தது காங்கிரஸ்

லக்னோ: உபி.யில் மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் முறையே 37, 38 தொகுதிகளில்  போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய லோக் தளத்துக்கு  3 தொகுதிகள் என மொத்தம் 78 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளில் இந்த கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  இந்நிலையில், இந்த கட்சிகளுக்காக காங்கிரஸ் 7 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ்பாபர் கூறுகையில், “மணிப்பூரி, கன்னுாஜ் மற்றும் பிரோசாபாத் தொகுதிகளில்  காங்கிரஸ் கட்சி போட்டியிடாது.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் மற்றும் அவரது மகன் ஜெயந்த் ஆகியோரது தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும்  காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாது” என்றார். அதே நேரத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக் தளத்துக்காக விட்டுக்கொடுத்த 7வது மக்களவை தொகுதி எது என்பது அறிவிக்கப்படவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi Party ,constituencies ,Bahujan Samaj , Samajwadi, Bahujan Samaj, 7 Volume ,sacrifice , Congress
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை