×

தேர்தல் செலவுகளை கண்காணிக்க வாடகை விமானங்களின் விவரம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

பாட்னா: தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலர், தேர்தல் பிரசாரத்துக்காக வாடகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவுள்ளனர். தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக வாடகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின்  பயண விவரங்கள், அதில் பயணம் செய்யும் நபர்கள் ஆகியவற்றின் விவரத்தை மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு  துறையினரிடம் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாடகை விமானங்களில் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான சந்தேக பணிபரிமாற்றத்தை வருமான வரித்துறைகண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்பவர்  அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,flights , Monitor, election expenses, Election, Commission a
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!