பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் பைனலில் டொமினிக் தீமுடன் மோதுகிறார் ரோஜர் பெடரர்: காயத்தால் விலகினார் நடால்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்), ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதுகிறார்.பரபரப்பான அரை இறுதியில் ரோஜர் பெடரருடன் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் மோதவிருந்த நிலையில், முழங்கால் மூட்டு காயம் காரணமாக நடால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெடரர்  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை (28 வயது, 14வது ரேங்க்) எதிர்கொண்ட டொமினிக் தீம் (25 வயது, 8வது ரேங்க்) 7-6 (7-3), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 31 நிமிடம் போராடி  வென்றார்.பைனலில் பெடரர் - டொமினிக் தீம் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்குவை எதிர்கொள்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: