×

முலாயம் மருமகளுக்கு சீட் இல்லை

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சிக்கு மிக செல்வாக்குள்ள மக்களவை தொகுதி சம்பல். முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் இத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சம்பல் தொகுதியில் முலாயமின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் இம்முறை போட்டியிடப் போவதாக பலமான பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால், இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டும் அதில் அபர்ணா பெயர் இல்லை மேலும், சம்பல் தொகுதியில் ஷபீக்-உர்-ரஹ்மான் பார்க் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அபர்ணா யாதவ் ஏமாற்றமடைந்துள்ளார். 2017 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணா போட்டியிட்டார்.

முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் என மொத்த குடும்பமுமே அபர்ணாவுக்காக பிரசாரம் செய்தது. பலனில்லை. அபர்ணா தோற்றுவிட்டார். இதனால் அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் யாதவின் பிரகதீஷல் சமாஜ்வாடி (லோஹியா) கட்சியில் அவர் சேரக்கூடும் என்று தகவல் ெவளியாகியுள்ளது. இதற்கிடையே, மருமகள் அபர்ணாவுக்கு சீட் தரவில்லை என்றால் பிரசாரத்துக்கு வரமாட்டேன் என்று அகிலேஷிடம் முலாயம் மிரட்டி உள்ளதாக கடைசிக்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mulayam ,daughter-in-law , Mulayam
× RELATED முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்