×

இவ்வளவு கஷ்டங்களுக்காக மகன்களுக்கு சீட்..... தலைசுற்றும் குமாரசாமியின் விளக்கம்

கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்ப அரசியல் செய்கிறார் என்று பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில், குமாரசாமி புதிதாக மூன்று விளக்கம் அளித்திருக்கிறார்.
1. எனது மகனை மண்டியா தொகுதியில் நிறுத்தி அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது எம்பியாக்க வேண்டும் என்பதற்காகஅல்ல. காவிரி விஷயம் உள்பட பல வகையில் சிரமத்தை அனுபவித்து வரும் மண்டியா மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. 2. நான் இதயம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது அரசியல் ரீதியாக எனக்கு பக்க பலமாக எனது மகன் நிகில் இருந்தார். நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் செல்ல வேண்டாம். உங்களுக்கு பதிலாக நான் மக்களை சந்திக்கிறேன் என்று எனது சுமையை புரிந்துகொண்டு தோள் கொடுத்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு உதவியாக தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

3. எனது மகன் நிகிலையும், எனது அண்ணன் மகன் பிரஜ்வலையும் குடும்ப பாசத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரவில்லை. எதிர்க்காலத்தில் மஜதவுக்கு பலம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு அழைத்து வந்துள்ளோம். இதை குடும்ப அரசியல் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார். இந்த விளக்கத்தை கேட்ட மஜத நிர்வாகிகள் உள்பட எதிர்க்கட்சிகாரர்கள், இவர்கள் அழுது அலப்பற பண்றதுல மட்டும் கெட்டிக்காரங்க இல்ல, எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பார்கள் போல என்று தலையில் அடித்து கொண்டார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sons , kumarasamy
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...