×

மகா.வில கூட்டாளி கோவாவுல எதிராளி: 2 வேட்பாளர்கள் அறிவித்தது சிவசேனா

கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ.வுக்கு எதிராக சிவசேனா போட்டியிடுகிறது. கோவா தலைநகர் பனாஜியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியதாவது: கோவாவில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ.வுக்கு எதிராக சிவசேனா போட்டியிடுகிறது. வடக்கு கோவா தொகுதியில் கட்சியின் கோவா மாநிலத் தலைவர் ஜிதேஷ் காமத், தெற்கு கோவா தொகுதியில் கட்சியின் துணைத் தலைவர் பிரபுதேசாய் நாயக் ஆகியோர் போட்டியிடுவார்கள்.

கோவாவில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும்  இடைத்தேர்தலிலும் சிவசேனா போட்டியிடும். 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாஜ.வுடன் சிவசேனா கூட்டணியில் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த கூட்டணி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மட்டுமானது.  மற்ற மாநிலத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து சிவசேனா தன்னிச்சையாக முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maha Vilwan ,partner ,Shiv Sena ,Goa , MAHARASTRA, GOA, shivSena, candidates
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...