×

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் விபரீதம் திருச்சி பெண் போலீஸ் தற்கொலை லாரியில் மோதி சாக முயன்ற காதலன்

திருச்சி: காதலுக்கு  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருச்சியில் ஆயுதப்படை பெண் போலீஸ்  தற்கொலை செய்துகொண்டார். அவரது காதலன் பைக்கை லாரி மீது மோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை திம்மாச்சிபுரத்தை  சேர்ந்தவர் குமார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள்  ராஜலட்சுமி (25). இவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சி ஆயுதப்படையில் பெண்  போலீசாக பணியில் சேர்ந்தார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள காவலர்  குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்தார். நேற்று அறையில் இருந்த ராஜலட்சுமி திடீரென அரளி விதையை அரைத்து குடித்து உயிருக்கு ஆபத்தான  நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ராஜலட்சுமியை  மருத்துவமனையில் அனுமதித்தது யார் என விசாரித்தபோது பெட்டவாய்த்தலையை  சேர்ந்த காவலர் சிவகுமார் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சிவகுமார்,  2017ம் ஆண்டு திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிக்கு  சேர்ந்தார்.

அப்போது இவருக்கும், உடன் பணியாற்றிய  ராஜலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் 2 பேரின்  வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  ராஜலட்சுமிக்கு நேற்று காலை சிவகுமார் போன் செய்தார்.  அவர் போனை  எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்தார். அங்கு அரளி விதையை  குடித்து மயங்கி கிடந்த ராஜலட்சுமியை மீட்டு அரசு  மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காதலி உயிருக்கு ஆபத்தான நிலையில்  இருந்ததை பார்க்க மனமில்லாத சிவகுமார், பைக்கில் சென்றபோது தானும் தற்கொலை  செய்ய முடிவு செய்து திருச்சி கருமண்டபம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது  மோதியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கே.கே  நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parents ,girl police suicide lover ,Trichy , love, Trichy, girl police, suicide
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்