×

சீனாவின் இந்திய தூதரகத்தில் சுங்க புலனாய்வு அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: கடத்தல் மற்றும் நிதி மோசடிகளை தடுக்க நேபாளம், சிங்கப்பூர், பிரஸ்ெசல்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்தல் மற்றும் நிதி மோசடி பற்றிய உளவுத் தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். இந்நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கும், சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் பொருட்கள் கடத்தப்படுவதும், வரி ஏய்ப்பு உள்ளிட்ட வர்த்தக அடிப்படையிலான நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதையும் இந்தியாவில் உள்ள சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 இதையடுத்து சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், காங்சோ மாநிலத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் ஆகியவற்றில் 2 சுங்க புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Customs intelligence officials ,Indian ,embassy ,China , China's Indian Embassy, Customs, Central Government
× RELATED உன்னத உறவுகள்