×

திமுக சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்

பூந்தமல்லி, திருப்போரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்
பெரம்பூர் தொகுதி ஆர்.டி.சேகர்
பெரம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர்(53) போட்டியிடுகிறார்.
இவர் பிகாம், பி.எல்., படித்துள்ளார். இவரது தந்தை பெயர் ராஜமன்னர். ஆர்.டி.சேகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆர்.டி.சேகர் வட சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், பெரம்பூர் பகுதி செயலாளர், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது(96ம் ஆண்டு) இவர் கவுன்சிலராக இருந்துள்ளார். வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் பதவிகளை வகித்துள்ளார்.

பூந்தமல்லி(தனி) ஆ.கிருஷ்ணசாமி
பூந்தமல்லி(தனி) தொகுதியில் ஆ.கிருஷ்ணசாமி(54) போட்டியிடுகிறார். தந்தை பெயர்: ஆதிசிவம். தாய் பெயர்: நாகபூஷணம், மனைவி: மாலதி, மகள்: ஏ.கே.எஸ்.தாரணி. இவர் பி.எல்., பட்டதாரி. வழக்கறிஞர் தொழில் செய்து  வருகிறார். 1999, 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எம்.பி.,யாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பதவி வகித்துள்ளார்.

திருப்போரூர் தொகுதி செந்தில் (எ) எஸ்.ஆர்.இதயவர்மன்
திருப்போரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் (எ) எஸ்.ஆர்.இதயவர்மன்(45) போட்டியிடுகிறார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், கிருத்திகா(13) ஜெயஸ்ரீ (9) என 2 மகள்களும் சந்தோஷ் (7) என்ற மகனும் உள்ளார். இவர்  தந்தை எஸ். ஆர்.லட்சுமிபதி திருப்போரூர் ஒன்றிய குழு தலைவராக 2001 லிருந்து 2006 வரை பணியாற்றி உள்ளார். செந்தில் (எ) எஸ்.ஆர்.இதயவர்மன் விவசாயம் மற்றும் ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். இவர் ஒன்றிய  இளைஞரணி துணை அமைப்பாளர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வகித்துள்ளார். தற்போது திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

விசிக வேட்பாளர்கள் பயோ டேட்டா
தொல்.திருமாவளவன்- விசிக தலைவர், போட்டியிடும் தொகுதி- சிதம்பரம்(தனி), படிப்பு-எம்.ஏ, பி.எல், பி.எச்.டி, பிறந்த தேதி- 17.08.1962, ஊர்- அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அங்கனூர் கிராமம். ‘பாதிக்கப்பட்டோரியல்  நோக்கில் மீனாட்சிபுரம் மதமாற்றம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.து.ரவிக்குமார் - விசிக பொதுசெயலாளர், போட்டியிடும் தொகுதி- விழுப்புரம்(தனி), படிப்பு-எம்.ஏ, பி.எல், பிஎச்டி, பிறந்த தேதி- 29.05.1960, ஊர்- நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு கிராமம். ‘மன்னன் நந்தனின்  மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில்  ஆய்வு செய்து  தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,DMK , DMK's ,legislative ,18 constituencies
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...