×

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

பனாஜி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். கடந்த 2014-ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், மனோகர் பாரிக்கர் அப்பதவியை துறந்துவிட்டு தனது சொந்த மாநிலமான கோவாவுக்கு முதலமைச்சர் ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர்,  மும்பை, டெல்லி நகரங்களில் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார். தற்போதும் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் காலமானார் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கோவா முன்னாள் துணை முதல்வரும், வடக்கு கோவா மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.வின் பலம் 13 ஆக குறைந்துள்ளது.  ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு, கோவா எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா சோகமான மரணத்தால், சட்டப்பேரவையில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.வி.ன் பலம் குறைந்துவிட்டது. அந்த கட்சி நீண்ட காலமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.  பா.ஜ.வின் பலம் மேலும் குறையலாம் என்பதால், சிறுபான்மை அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பா.ஜ அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி  அமைக்க அழைக்க வேண்டும். அதை விடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது சட்டவிரோதமாக இருக்கும். அதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். இவ்வாறு சந்திரகாந்த காவ்லேகர் கூறியுள்ளார். கடிதம் கோவா ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manohar Parrikar ,Goa , Cancer, Goa, Chief Minister Manohar Parrikar passed away
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...