×

கூட்டணியில் சிக்கலில்லை பிரதமர் மோடிதான் எங்களுக்கு பிரச்னை: காங். செய்திதொடர்பாளர் ஆவேசம்

சென்னை: ‘மக்களவைத் தேர்தலுக்காக மாநிலங்களில் இதர கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்தார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வேண்டாம் என்று, டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ெதன்மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இதுகுறித்து காங்.செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘‘மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில், எந்தவிதப் பிரச்னையும் எழவில்லை. இந்த நாட்டில் இருக்கும் ஒரே பிரச்னை பிரதமர் மோடிதான். இந்தத் தேர்தலில் பாஜவையும், மோடியையும் வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , Coalition, Prime Minister Modi, Cong. spokesman
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...