×

ஜார்க்கண்டில் காங்கிரசுடன் கூட்டணி கட்சிகள் உர்ர்...

ஜார்க்கண்டில் காங்கிரசுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி சேர முடிவானது. இந்த 4 கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜவுக்கு கடும் நெருக்கடியை தர முடியும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில் தொகுதி பங்கீட்டில் இந்த கட்சிகளுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 7ல் காங்கிரஸ், 4ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 2ல் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, 1ல் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்த தொகுதி கணக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எதிர்ப்புக்கொடியை காட்டி வருகிறது. தும்கா, ராஜ்மகால் ஆகிய இடங்களில் முக்தி மோர்ச்சா கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகள். அத்துடன் கிரிதி, ஜம்ஷேத்புர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் பாண்டே கூறும்போது, ‘சிங்பும், குன்தி ஆகிய தொகுதிகளையும் எங்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த தொகுதிகளில் காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது நாங்கதான் இங்கு ஸ்ட்ராங்காக இருக்கிறோம்’ என்றார். ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் மாநில தலைவர் அஜய்குமார் கூறுகையில், ‘‘முக்தி மோர்ச்சா கட்சி ஒரு தொகுதி அதிகம் கேட்டது, அதை தந்துவிட்டோம். சிங்பும், குன்தி எப்படி இந்த விவகாரத்தில் வந்தது என தெரியவில்லை. அனைத்து கருத்து வேற்றுமையும் பேசி தீர்க்கப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jharkhand ,coalition parties ,Congress , Jharkhand, Congress,
× RELATED பயமுறுத்தும் பாஜ அழிந்து விடும்...