×

உலகம் பலவிதம்

குப்பையான பிரேசில்
பிரேசில் சா பாலோ நகரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை நீர் புகுந்ததால் சேதமடைந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கடை சாமான்கள், உணவுப் பொருட்களை மக்கள் ஆங்காங்கே தெருவில் கொட்டுவதால் எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சி அளிக்கிறது.

பயங்கர மின்னல்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டா பார்பரா துறைமுகத்தில் பயங்கர இடி, மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட துல்லிய புகைப்படம்.

தண்ணீர் பஞ்சம்:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அங்குள்ள மக்கள் குடிநீர் லாரிக்காக மணிக்கணக்கில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  நீண்ட வரிசையை கடந்து, தங்களின் காலி பக்கெட்டை வைப்பதற்காக மூதாட்டியும், அவரது மகளும் செல்கின்றனர்.


மணமகள் ஆடையில் காதலுக்கு அஞ்சலி
அமெரிக்காவின் நாஸ்வில்லி நகரைச் சேர்ந்த சாரா பலுச்சுக்கும், முகமது ஷாரிப்புக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், முகமது ஷாரிப் விளையாட்டு பொருளை விற்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட சாதாரண தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், தாங்க முடியாத துக்கமடைந்த சாரா, திருமண நாளான்று, தனது காதலனின் சமாதி முன்பு மணப்பெண் ஆடையில் அஞ்சலி செலுத்தி கதறி அழுத சம்பவம் உலகம் முழுவதும் காண்போரை வேதனை அடையச் செய்தது.

‘அடிச்சு துவைச்சாலும் கிழியாது’
‘இது புது மாடல் சேலைங்க... எவ்வளவு அடிச்சு துவைச்சாலும் எதுவும் ஆகாது... உறுதியா இருக்கும்...’ என மும்பையில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்ட சேலையை கடைக்காரர்கள் கூவிக்கூவி விற்கின்றனர். இச்சேலைகளை பெண்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : world , world
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்