×

அதிமுகவுடன் கூட்டணி பா.ம.க. மாவட்ட தலைவர் கட்சியில் இருந்து விலகல்

ஈரோடு: அதிமுகவுடன் ராமதாஸ், அன்புமணி கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு பா.ம.க. தலைவர், கட்சியில் இருந்து விலகினார். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி, கொள்ளை ஆட்சி நடக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஆனால், இதற்கு மாறாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்ததுடன் பா.ம.க. நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, மாநில துணை தலைவர் நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட பலர், பா.ம.க.வில் இருந்து விலகினர்.  

இந்தநிலையில்,  ஈரோடு மத்திய பகுதி மாவட்ட தலைவராக இருந்த நடராஜ், கட்சியில் மாவட்ட தலைவர்  பதவியில் இருந்து விலகினார். இதுகுறித்து நடராஜ் கூறுகையில்,  ``ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை  யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் நான் பா.ம.கவில் வகித்து வந்த ஈரோடு மத்திய  மாவட்ட தலைவர் பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகி, அ.ம.மு.க.வில் இணைந்துள்ளேன்’’  என்று சொன்னார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alliance ,party leader , Alliance ,AIADMK PMK,Distraction,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி