×

பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி துப்பாக்கி உரிமம் கேட்டு சகோதரிகள் மனு

கோவை: கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த சாந்தகுமார் மகள்கள் தமிழ்ஈழம் (20), ஓவியா (14) ஆகியோர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தந்தையுடன் வந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். கலெக்டர் ராசாமணி இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், ‘‘தற்போதைய சூழலில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை செய்திதாள்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிந்து வருகிறோம். இக்கால கட்டங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியான நிலையில், தினமும் பெண்கள் மீதான வன்மங்கள் அதிகப்படியாக உள்ளதால் சுயமாக எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் எங்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்ஈழம் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் நீதி கிடைக்குமா என்பது தெரியவில்லை ? இவ்விவகாரத்தில் முதலில் 1500 வீடியோ, நூற்றுக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின் 4 வீடியோ மட்டுமே உள்ளது சில பெண்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என கூறுகின்றனர். இந்நிலையில், எங்களுக்கு தெரிந்தவர்களை நாங்கள் பார்க்கும் போது கூட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தபட்ட திருநாவுக்கரசாக இருப்பாரோ, சதீஸாக இருப்பாரோ என்கிற அச்சம் நிலவுகிறது. எனவே எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள எங்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமம் வழங்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pollachi ,sisters ,hearing gun license , Pollachi, incident, Sues petition ,requesting ,gun license
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!