×

கோவை எஸ்பியை சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழகத்தில் நாளை கோர்ட் புறக்கணிப்பு: வக்கீல்கள் போராட்டம்

ஈரோடு: தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை  குழு மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், பொள்ளாச்சி பாலியல்  வழக்கின் பின்னணியில் ஆழமான சதி திட்டம் இருப்பது தெரிய வருகிறது. எனவே 120பி   பிரிவின் கீழ் வழக்கை மாற்ற வேண்டும். விசாரணை முடியாத நிலையில், கோவை    மாவட்ட எஸ்.பி. தன்னிச்சையாக 4 பேர் மட்டுமே   சம்பந்தப்பட்டவர்கள், வேறு  நபர்கள் யாரும் இல்லை என்று கூறி இருப்பது, விசாரணையில் சட்ட விரோதமாக  குறுக்கிட்டு உண்மையை மறைக்க முற்படுவதோடு,   தடயங்களையும் மறைக்கும் முயற்சி என தெரிய வருகிறது.

பொள்ளாச்சி பாலியல்   வன்கொடுமை சம்பவத்தில் சதி திட்டத்துக்கு உடந்தையாக கோவை எஸ்பி இருப்பது தெரியவருகிறது. எனவே, இவ்வழக்கில் அவரையும் ஒரு எதிரியாக சேர்க்க வேண்டும்.  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்து தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,SPI ,fight ,Attorneys , Cause, coffeeme, Tomorrow's court, lawyers, scramble
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...