×

இன்று ஐஎஸ்எல் கால்பந்து பைனல் புதிய சாம்பியன் யார்?: பெங்களூரு - கோவா மோதல்

மும்பை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி - எப்சி கோவா அணிகள் இன்று மோதுகின்றன.ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 5வது சீசனின் இறுதிப் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பெங்களூரு, கோவா அணிகளே அரை இறுதியிலும் அபாரமாக வென்று  பைனலுக்கு முன்னேறி உள்ளன. இந்த 2 அணிகளும் 2வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்த அணிகள் தலா 10 வெற்றி, 4 சமன், 4 தோல்வியுடன் தலா 34 புள்ளிகளை பெற்றன. கோல் வித்தியாச அடிப்படையில் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது.  இந்த அணிகள் மோதிய 2 லீக் ஆட்டங்களிலும் பெங்களூரு அணியே வெற்றி பெற்றது. கோவாவில் நடந்த போட்டியில் 2-1 என்ற கணக்கிலும், பெங்களூருவில் நடந்த போட்டியில் 3-0 என்ற கணக்கிலும் கோவாவை வீழ்த்தியது.

ஐஎஸ்எல் தொடரை பொருத்தவரை, லீக் சுற்றில் முதலிடம் பெற்ற அணி கோப்பையை வென்றதாக வரலாறே இல்லை. முதல் சீசனில் சென்னை அணி முதலிடம் பிடிக்க, 3வது இடம் பிடித்த கொல்கத்தா அணி கோப்பையை  வென்றது. தொடர்ந்து 2வது சீசனில் கோவா முதலிடம் பிடித்தாலும், 3வது இடம் பிடித்த சென்னை அணி கோப்பையை தட்டி வந்தது.மேலும் 3வது சீசனில் மும்பை அணி முதலிடத்தை அடைய, 4வது இடம் பிடித்த கொல்கத்தா அணி கோப்பையை உறுதி செய்தது. கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு முதலிடம்... ஆனால் 2வது இடம் பிடித்த சென்னை  அணியே கோப்பையை கைப்பற்றியது. தொடரும் இந்த வரலாற்றை பெங்களூரு அணி இன்று மாற்றி எழுதுமா, இல்லை கோவா அணி வரலாற்றை புதுப்பிக்குமா என்பது இன்று இரவு தெரியும். அதுமட்டுமல்ல, தலா 2 முறை கோப்பையை வென்ற கொல்கத்தா,  சென்னையை தொடர்ந்து ஐஎஸ்எல் தொடரின் புதிய சாம்பியன் யார் என்பதும் முடிவாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : football champion ,conflict ,Goa ,Bangalore , ILC Football, Final,,champion , Bengaluru - Goa
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு