×

தனியே தன்னந்தனியே...அது அந்தக்காலம்

‘உங்கள் பொன்னான  வாக்குகளை எங்கள் சின்னத்தில் முத்திரையிடுமாறு’ கேட்கும் பழக்கம் மலையேறி விட்டது. காரணம் குத்துவதுக்கு பதில் அழுத்தும் வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளதுதான்.அமெரிக்காவில் கூட அதிபர் தேர்தல்களில் இன்னும் வாக்குசீட்டு முறைதான் அமலில் உள்ளது.வாக்குச்சீட்டில்  வரிசையாக வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். பெயர்களுக்கு நேராக அவர்களது சின்னம் இடம் பெற்றிருக்கும்.  வாக்குச்சாவடியில் வைத்திருக்கும் தடுப்புக்கு பின்னால் மறைவாக போய் விரும்பிய சின்னத்தில் முத்திரையிட்டு மடித்து, வெளியில் வைத்திருக்கும் ஒரே ஒரு வாக்குப்பெட்டியில் சீட்டை  போடுவார்கள். அது நிரம்பினால்  அடுத்த பெட்டியை வைப்பார்கள்.

வாக்குகள் எண்ணும் போது ஒரு வட்டம் அல்லது ஊரில் பதிவான வாக்குகள் எல்லாவற்றையும் ஒரே பெட்டியில் கொட்டி கலக்குவார்கள். பின்னர் அவற்றை தலா 50 சீட்டுகளாக கட்டுவார்கள். பிறகு எண்ண ஆரம்பிப்பார்கள்.ஆனால் 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் பொது தேர்தலில் இந்த பிரச்னை கிடையாது. ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும்  தனித்தனியாக வாக்குப் பெட்டிகள் தடுப்புக்கு பின்னே வைக்கப்பட்டிருக்கும். வாக்குச்சீட்டை  கொண்டு  போய் நாம் விரும்பும் பெட்டியில் போட்டுவிட்டு வரலாம். இந்த முறை வாக்கு எண்ணுவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது பிரச்னையாக இருந்ததால் அடுத்த பொதுத்  தேர்தலிலேயே மாற்றப்பட்டு விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alone alone, tha, time
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...