×

‘பிரதமர் நரேந்திர மோடி’ ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ்

புதுடெல்லி:  பிரதமர் மோடியின்  சுயசரிதை குறித்த இந்தி படத்தை இயக்குனர் ஓமங்குமார் டைரக்ட் செய்து வருகிறார். பிரபல நடிகர் விவேக் ஒபராய் மனோஜ் ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி என்ற  இந்த படம் அடுத்த மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை சந்திப் சிங் தயாரித்துள்ளார். படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் வெளியிட்டார். தர்ஷன் குமார், போமன் இரானி, பிரசாந்த் நாராயணன், ஷெரீனா வாகப், பர்கா பிஷ்த் செங்குப்தா, அஞ்சன்  வத்சவ், ராஜேந்திர குப்தா, ஆக்‌ஷாத் சலுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படத்தின் 2வது  போஸ்டரை பாஜ தலைவர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi , 'Prime Minister, Narendra Modi , released ,April 12
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...