×

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும்: அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நீண்டநாள் ஆனாலும் இந்தியா அதுவரை காத்திருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவை இந்தியா வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 13ம்  தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4வது முறையாக தடை செய்தது. இதனால் சீனா மீது இந்தியா அதிருப்தியில்  உள்ளது.

இந்த நிலையில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவிக்க நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும் அது வரை காத்திருக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அரசு வட்டாரங்கள்  மேலும் கூறியதாவது:இது தொடர்பாக எந்த சமாதானத்தையும் இந்தியா ஏற்காது. சீனா உள்பட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுடன் மசூத் அசார் தீவிரவாதி என்பதற்கான ஆதாரங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளோம். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இதில் 7 நாடுகள் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. இந்த  பட்டியலில் அசாரை சேர்க்கும் வரை இந்தியாவுக்கு ஓய்வு இல்லை. சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்கும் விவகாரத்தில் சீனாவுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் இந்தியா அதுவரை காத்திருக்கும்.  இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Masood Azar , Masud Azar, international, terrorist,government ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!