×

ஆணையம் நடவடிக்கை கடைசி 2 நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட தடை

புதுடெல்லி: தேர்தலுக்கு முன் கடைசி 2 நாளில், தேர்தல் அறிக்கை வெளியிட அரசியில் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட, அரசியல் கட்சிகளுக்கு கால விதிமுறை எதுவும் இல்லாமல் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், முதல்கட்ட தேர்தல் நாளில் பா.ஜ தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இது வாக்காளர்களை வசீகரிக்கும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், தேர்தலுக்கு முன் கடைசி 2 நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியிடுவதையும், நடத்தை விதிமுறையின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126வது பிரிவின்படி, தேர்தலுக்கு முன் கடைசி 2 நாள் தேர்தல் அமைதிக் காலம். அப்போது அரசியல் கட்சிகள் எந்த தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது. திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமறைப்படி, ஒரே கட்ட தேர்தலாக இருந்தால், தடைக்காலத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commission ,release , Commission, action, prohibited, publish , election statement
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...