×

எம்எல்ஏ பலம் குறைந்ததால் கோவாவில் பாஜ ஆட்சி கவிழுமா?: உரிமை கோருகிறது காங்கிரஸ்

பனாஜி: கோவாவில் மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா இறந்ததை அடுத்து, ஆளும் பாஜ.வுக்கு தனிப் பெரும்பான்ைம சரிந்துவிட்டது என்றும், அதனால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும்  கவர்னரிடம் காங்கிரஸ் மீண்டும் உரிமை கோரியுள்ளது. கோவா முன்னாள் துணை முதல்வரும், வடக்கு கோவா மபுசா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.வின் பலம் 13 ஆக குறைந்துள்ளது.  ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு, கோவா எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோசா சோகமான மரணத்தால், சட்டப்பேரவையில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.வி.ன் பலம் குறைந்துவிட்டது. அந்த கட்சி நீண்ட காலமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.  பா.ஜ.வின் பலம் மேலும் குறையலாம் என்பதால், சிறுபான்மை அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பா.ஜ அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, பெரும்பான்மை உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி  அமைக்க அழைக்க வேண்டும். அதை விடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது சட்டவிரோதமாக இருக்கும். அதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். இவ்வாறு சந்திரகாந்த காவ்லேகர் கூறியுள்ளார். கடிதம் கோவா ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மெஜாரிட்டி நிரூபிப்பது சாத்தியமா?
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கூறுகையில், ‘‘மொத்த இடங்கள் 40. 3 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மோசமானதால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைக்கு வந்து ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக குறையும். பா.ஜ.வின் பலம் 12 ஆக குறையும். ஆளுங்கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம், காங்கிரஸ் அணியில் சேரும்படி கூறியுள்ளோம். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், காங்கிரஸ் வெற்றி பெறும்’’ என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Goa ,MLA , Because , MLA's, BJP ,rule , Goa
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...