×

திமுக தலைமையிலான கூட்டணிக்கு 25 விவசாய சங்கங்கள் ஆதரவு; மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்தனர்

சென்னை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 25க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தங்களின் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட தமிழக விவசாய சங்கங்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.

இதில், தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, ஏரிநீர் பாசன சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட கடன் பெற்ற விவசாயிகள் சங்கம், தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காளச்சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம், இயற்கை வேளாண்மை சிறுதானியர் உற்பத்தியாளர் சங்கம், தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம், படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம், படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம், சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்கம்,  தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை), தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை), மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை,பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், அனைத்து பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம், கரும்பு வளர்ப்போர் மற்றும் சர்க்கரை ஆலை முன்னேற்றச் சங்கம், டெல்டா அமைப்பு, அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம் உள்ளிட்ட சங்க பிரநிதிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது திமுக பொருளாளர் துரைமுருகன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் கே.பி.இராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஸ்டீபன், பொதுச்செயலாளர் இராயப்பன் மற்றும் மாநில நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Met ,DMK ,unions ,MK Stalin , DMK, Parliamentary Elections 2019, Alliance Parties, Agricultural Societies, MK Stalin,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்