டெல்லி கேப்பிட்டல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்லும்; வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் ஷர்மா நம்பிக்கை

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் ஷர்மா. டெல்லியைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்க வில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சொந்த மைதானமாக சிறு வயதில் இருந்தே விளையாடி உள்ளார். இங்கு  முதன்முறையாக டெல்லி அணிக்காக விளையாட இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இதுபற்றி இசாந்த் ஷர்மா கூறுகையில், எனக்கு மற்ற மைதானங்களை விட பெரோஸ் ஷா கோட்லா மைதானம் சிறப்பு வாய்ந்தது.

17 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இருந்தே இங்கேதான் விளையாடி வருகிறேன். எனக்கு மட்டுமல்ல, டெல்லியில் இருந்து கிரிக்கெட் வீரர்களாக வந்துள்ள அனைவருக்கும், பெரோஸ் ஷா கோட்லா மைதானம் குறித்த நினைவுகள் இருக்கும். ஐபிஎல் தொடங்கி 12 வருடத்திற்குப் பிறகு சொந்த மைதானத்திற்குரிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். இந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று நம்புகிறேன், என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>