×

மதுரவாயல் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நைஜீரியர் கைது!

சென்னை: மதுரவாயல் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி மதுரவாயல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் போது கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று மேலும் ஒரு நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகரில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்களான தேவராஜ், முரளி ஆகியோர் வந்தனர். அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர்.

ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் இருந்த ரூ.10 லட்சம் பெட்டியை தரும்படி கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.  இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. அதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் இந்த கொள்ளை கும்பலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே, ஆமு மற்றும் சென்னை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரேயா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மேலும் ஒரு நைஜீரியாருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மைசூருக்கு விரைந்தது. இதையடுத்து, இன்று காலை பெரல் என்பவரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே ஸ்டூடென்ட் விசாவில் படிப்பதற்காக சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போதை பொருள் வாங்குவதற்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும் 10 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ATM suspect ,Nigerian , Maduravayal, ATM robbery, Nigerian, arrested
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு