குடும்ப சண்டையால் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற 65 வயது மூதாட்டி : பத்திரமாக மீட்பு

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் 30 அடி கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட மூதாட்டி முடிச்சூரை சேர்ந்த 65 வயதுள்ள இந்திராணி. தற்கொலை முயற்சியாக இவர் 30 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் இந்திராணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். மகன் மற்றும் மருகளுடன் வசித்து வந்த இந்திராணி குடும்ப சண்டையால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. சொத்து தகராறில் அடிக்கடி நிகழும் குடும்ப சண்டையே இவரது விரக்திக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மனைவி குடும்பம் நடத்த மறுப்பு காவலாளி தற்கொலை