×

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய பால்கோட் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை: மசூத் அசார் செய்தி வெயிட்டதாக தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அதனை நிரூபிக்க பிரதமர் மோடியுடன் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஈடுபட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் வார இதழான அல்கலாமில் வழக்கமாக வெளியான இந்த கட்டுரையில் தகவல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியா நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள், எல்லோரும் நன்றாக உள்ளனர் என்றும், பால்கோட் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தவறான செய்தியை பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நான் நன்றாக இருக்கிறேன். என் சிறுநீரகமும் கல்லீரலும் நன்றாகத்தான் உள்ளது என மசூத் அசார் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல கடந்த 17 ஆண்டுகளாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் கூட இருந்ததில்லை என்றும் ஒரு டாக்டரை அணுகியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா போன்ற தாக்குதல்கள் சுதந்திர இயக்கம் என்றும், இந்த தாக்குதலை நடத்திய அடில் அஹ்மத் தார் காஷ்மீர் மக்களின் இதயத்தில் தீ மூட்டினார் என்றும் விரைவில் அது அணைய போவதில்லை, சுதந்திர இயக்கம் மேலும் பரவிடும் என்று ஜெ.இ.எம் தலைவர் அந்த கட்டுரையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அல்கலாம் இதழில் சாடி என்னும் பேரில் மசூத் அசார் வழக்கமாக கட்டுரைகளை எழுதுவார். ஆனால் மசூத் அசார் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் கூறி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மசூத் அசார் வழக்கமாக எழுதும் பெயரில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் அது அவர் எழுதியதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : No one ,Pakistan ,attack ,Masood Azhar , Masud Azar, Balcot Attack, Pakistan, Jaish-e-Mohammed
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி