×

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு எரிகரும்பு உபயமாக வழங்கும் பக்தர்கள்

சத்தியமங்கலம் :  பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா தேவையான எரிகரும்புகளை பக்தர்கள் உபயமாக வழங்கி வருகின்றனர். சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 4 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. கடந்த 12ம் தேதி அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து தினமும் இரவில் மலைவாழ்மக்களின் இசைக்கருவிகள் இசைத்தபடி அம்மன் புகழ்பாடும் பாடல்களை கிராம பெரியவர்கள் பாடியவாறு கம்பம் ஆடும் நிகழ்வு நடந்து வருகிறது.

மார்ச் 18ம் தேதி காலை குண்டத்திற்கு தேவையான எரிகரும்புகள் வெட்டும் நிகழ்வும், அன்று இரவு குண்டத்தில் எரிகரும்பு அடுக்கி வைக்கப்பட்டு நெருப்பிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 19ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கி அன்று மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், குண்டத்திற்கு தேவையான ஊஞ்ச மரம் மற்றும் வேம்பு மரத்துண்டுகளை பக்தர்கள் உபயமாக வழங்கி வருகின்றனர். இந்த மரத்துண்டுகள் கோயில் முன்புள்ள குண்டத்தின் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivals devotees ,Pannari Amman Kundam , Bannari Amman Temple,Bannari ,Erikarumpu,Devotes
× RELATED பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2...