×

ஈரோடு தொகுதியில் மதிமுக வெட்பாளர்கள் கணேசமூர்த்தி போட்டி : வைகோ அறிவிப்பு

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு தொகுதியில்  கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னதாக நேற்று திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய காட்சிகள் நேற்று வேட்பாளர்களை அறிவித்தன.  

திமுக, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு


தமிழகத்தில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு 1, (ஒரு ராஜ்யசபா சீட்), தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து, நாளை மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


இதையடுத்து தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய  2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நாகை தொகுதிக்கு முன்னாள் எம்பி செல்வராசு (62) மற்றும் திருப்பூர் தொகுதிக்கு முன்னாள் எம்பி சுப்பராயன் (72) ஆகியோரை வேட்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு நேற்று அறிவித்தது.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

இதனிடையே திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் முன்னாள் எம்பியும், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், மதுரை தொகுதியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.மு.லீக் கவுரவ ஆலோசகர் கே.நவாஸ்கனி போட்டியிடுகிறார்.

மதிமுக வேட்பாளர் அறிவிப்பு

இந்நிலையில் திமுக கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19ம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modem winners ,constituency ,match ,Ganesamurthi ,announcement ,Vaiko , MDMK, Candidate, Announcement, DMK, Renaissance Dravida Munnetra Kazhagam
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...