×

3-வது வேட்பாளா் பட்டியலை வெளியிட்ட காங்., : முன்னாள் முதல்வர் முகுல் சங்மா மேகாலயாவில் போட்டி

புதுடெல்லி,: மக்களவை தேர்தலில் போட்டியிடும் 18 பேர் கொண்ட 3வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேகாலயா மாநில  முன்னாள் முதல்வர் முகுல் சங்மா,  துரா தொகுதியில் போட்டியிடுகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்கனவே இரண்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையி–்ல், 18 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைமை நேற்று வெளியிட்டது. இதன்படி, அசாம் மாநிலத்தில் 5 தொகுதி, மேகாலயாவில் 2, உபி, சிக்கிம் மற்றும் நாகாலாந்து  மாநிலத்தில் தலா  1,  தெலங்கானாவில் 8 பேர் என பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், அசாம் மாநிலத்தில் உள்ள சிலிச்சார் தொகுதியிலும், கவுரவ் கோகாய் காலியாபோர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரும் தற்போதைய சிட்டிங் எம்பிக்களாக உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் வின்சென்ட் எச் பாலா மற்றும் பாபன் சிங் காடோவர் இருவரும் முறையே அசாம் மாநிலத்தில் உள்ள ஷில்லாங் மற்றும் திப்ருகர்க் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதில் பாலா தற்போதைய சிட்டிங் எம்பியாக உள்ளார். மூத்த தலித் தலைவர் பி எல் புனியாவின் மகன் தனுஜ் புனியா உபி மாநிலத்தின் பாராபங்கி(தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, சுவரூப தாஸ் அசாமின் கரீம்கஞ்ச்(தனி) தொகுியிலும், சுசாந்தா போரோகைன், ஜோர்கட் தொகுதியிலும், நாகாலாந்தில் கே எல் சிஸ்டியும், சிக்கமில் பாரத் பஸ்நெட்டும் போட்டியிடுகின்றனர். தெலாங்கானாவில் ரமேஷ் ரதோட்(திலாபத்), சந்திரசேகர்(பெட்டபல்லி), பொன்னம் பிரபாகர்(கரீம்நகர்), மதன் மோகன் ராவ்(ஜகீராபாத்), கலி அனில் குமார்(மேடக்), ரேவந்த் ரெட்டி(மல்காஜ்கிரி) கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி(செவெல்லா), மற்றும் பொரிகா பல்ராம் நாயக்மெகபூப்பாத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களில் கொண்டா விஸ்வேஸ்ரெட்டி டிஆர்எஸ் கட்சியில் சிட்டிங் எம்பியாக உள்ளார். இவர் டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போலோ மருத்துவமனை உரிமையாளரின் மகளை இவர் மணந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kang ,Mukul Sangma ,Meghalaya , Lok Sabha election, candidate list, Congress
× RELATED புதுச்சேரிக்கு முழுமையான மாநில...