×

ஏற்றுமதி 2.44% உயர்வு தங்கம் இறக்குமதி சரிவு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 266.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.44 சதவீதம் அதிகம். மருந்து, இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி அதிகமானதே இதற்கு காரணம். இறக்குமதி 5.4 சதவீதம் குறைந்து 362.6 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி 11 சதவீதம் குறைந்து 258 கோடி டாலராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை ஏற்றுமதி 8.85 சதவீதமும், இறக்குமதி 9.75 சதவீதமும் அதிகரித்துள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...