×

பரங்கிமலை ஏழுகிணறு தெருவில் திறந்தநிலை கால்வாயால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலந்தூர்: பரங்கிமலை கண்டோண்மென்ட் போர்டு 2வது வார்டுக்கு உட்பட்ட ஏழுகிணறு 2வது தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவின் ஓரம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் கான்கிரீட் சிலாப் போட்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.  வீடுகளின் நுழைவாயில் அருேக சுமார் 5 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த கால்வாய், திறந்த நிலையில் இருப்பதால், தெருவுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இந்த கால்வாயை தாண்டி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மக்கள் தடுமாறி கால்வாயில் விழுந்து செல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. சிறுவர்கள் விளையாடும் போது கால்வாயில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் அமைத்து மூட வேண்டும், என இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வீடுகளின் அருகில் உள்ள திறந்தநிலை கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடித்து பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்களும் இந்த கால்வாைய தூர்வாரி பராமரிப்பதில்லை. துர்நாற்றம் மற்றும் கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். அருகில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அகலமாக கட்டப்பட்டு கான்கிரீட் சிலாப் போட்டு மூடப்பட்டுள்ளது. ஆனால், முறையாக வரி செலுத்தும் எங்கள் பகுதியை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த கால்வாயை உடைத்து விட்டு புதிய கான்கிரீட் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accident ,canal ,Parangaimalai Seven Crane Street , Accidental , open canal, Parangaimalai
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...