×

பதற்றமான மாநிலமாக அறிவிக்க கோரிய பாஜவை கண்டித்து கொல்கத்தாவில் திரிணாமுல் 48 மணி நேர தர்ணா தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் அதிக பதற்றம் நிறைந்ததாக அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜ மனு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் திரிணாமுல் தர்ணா தொடங்கியுள்ளது.  மேற்கு வங்கத்தில் வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் மிகவும் பதற்றமானவையாக அறிவிக்கவும், அங்கு மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரியும் பாஜ தலைவர்கள் நேற்று முன்தினம் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தனர். இதற்காக பாஜவை கண்டிக்கும் வகையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்  48 மணிநேர தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.  கட்சியின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த தர்ணா கொல்கத்தாவின் எஸ்பிளனேட் பகுதியில் நேற்று தொடங்கியது.

அப்போது பாஜ மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்க மிட்ட திரிணாமுல் காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்கள் மற்றும் அட்டைகளை கையில் ஏந்தியபடி இருந்தனர். தர்ணா தொடர்பாக திரிணாமுல் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது: பாஜவுக்கு மேற்கு வங்கத்தில் அடித்தளம் எதுவும் இல்லாத நிலையில், மத்திய படைகளை பயன்படுத்தி மக்களவை தேர்தலில் வெற்றி பெற பாஜ திட்டமிட்டுள்ளது. . மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள நிலையில் பாஜவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பதற்றமான மாநிலமாக அறிவிக்க மனு கொடுத்துள்ளனர். இது எங்கள் மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா? இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் நடத்திவரும் இந்த தர்ணா போராட்டத்தை நாடகம் என பாஜ வர்ணித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trincomalee ,Calcutta , BJP, Kolkata, Trinamool
× RELATED பாஜகவில் இணைகிறேன்: கொல்கத்தா ஐகோர்ட்...