×

சஜ்ஜன் குமார் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை

புதுடெல்லி : 1984ம் ஆண்டு சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அவரது இரு சீக்கிய மெய்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள், குழந்தைகள், என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 1984ம் ஆண்டு நவம்பர் 1 , 2ம் தேதிகளில்  தென்மேற்கு டெல்லியின் கன்டோன்மென்ட் ராஜ்நாகர் பாகம்1ல் 5 சீக்கியர்கள் கொல்லப்பட்டது, பாகம் 2ல் குருத்வாரா கொளுத்தப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், பல்வான் கோக்கர், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கேப்டன் பாக்மல், கிதாரி லால், முன்னாள் எம்எல்ஏ மஹீந்தர் யாதவ் , கிஷன் கோக்கர் உள்ளிட்ேடார் கைது செய்யப்பட்டனர். விசாரணை நீதிமன்றம் இவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி சஜ்ஜன் குமார் சரண் அடைந்தார். அவர் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்ஏ பாப்டே, எஸ்ஏ நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில்,’’ சஜ்ஜன் குமாரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும். இவரை ஜாமீனில் விடக் கூடாது. அரசியல் செல்வாக்கால் சாட்சிகளை மிரட்டுவார். கலைப்பார். நியாயமான விசாரணைக்கு இது இடையூறாக இருக்கும்’’ என கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sajjan Kumar ,CBI ,Supreme Court , Sikhs riot case, Sajjan Kumar, CBI
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...