×

ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்ெபற்றுள்ளது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில கவுரவ ஆலோசகரும், எஸ்.டி. கூரியர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான கே.நவாஸ்கனி வேட்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர், ராமநாதபுரம் மாவட்டம் குருவாடியை சேர்ந்தவர். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ‘ஏணி’ சின்னத்தில் கே.நவாஸ்கனி போட்டியிடுவார் என்று தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் ஆணையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும், தனிச் சின்னம் ஏணி சின்னத்தை பெற்றபின் போட்டியிடக்கூடிய வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் கே.நவாஸ்கனிக்கு வழங்கியிருக்கிறான். இவர், நாடாளுமன்றத்தில் நற்பணியாற்றிட தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகளும், தோழமைக்கட்சி நண்பர்களும், அனைத்து சமுதாய மக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்” என்றார்.நவாஸ் கனியின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, குருவாடி கிராமம். மனைவி பெயர் ஹம்சத் பர்வீன். அப்ஷர், அகில் என்ற 2 மகன்கள் உள்ளனர். தற்போது, சென்னை அடையாறில் வசிக்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nawazaki ,Ramanathapuram ,Indian Union Muslim League , Indian Union Muslim League, Ramanathapuram Vol
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...