×

பா.ஜ சார்பில் போட்டியிட சீட்டா...? தெறித்து ஓடிய சேவாக்... இலவு காக்கும் காம்பீர்

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் 2014ல் பா.ஜ வசம். மே 12ல் நடக்கும் 2019 மக்களவை தேர்தலிலும் அப்படியே கைப்பற்ற பா.ஜ முயற்சி எடுக்கிறது. தலைவலியாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற கருத்து இன்னும் இருப்பதால் கூடுதல் கவனமாக தேர்தலை அணுகுகிறது பா.ஜ. எனவே பலவீனமான தொகுதிகளில் பிரபலங்களை களமிறக்க யோசித்து வருகிறது. டெல்லியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து பிரபலம் அடைந்த சேவாக் மற்றும் காம்பீரை பா.ஜ அணுகியது. இரண்டு பேருமே தீவிர பா.ஜ ஆதரவாளர்கள் என்பதால் இந்த முயற்சி. அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் சேவாக்கை நிறுத்த முடிவு செய்து கடந்த ஆண்டு பா.ஜ தகவல்களை கசிய விட்டது. அதிர்ந்து விட்டார் மனுஷன். தீப்பிடித்து பரவிய வதந்தியை நிறுத்த டிவிட்டர் மூலம் அவர் கூறுகையில்,’எதுவுமே மாறவில்லை. அத்தனையும் வதந்திதான். 2014ல் எப்படியோ அப்படித்தான் 2019 தேர்தலிலும். எப்போதும், இப்போதும் தேர்தலில் ஆர்வம் இல்லை’ என்று குறிப்பிட்டார்.

விடவில்லை பா.ஜ. மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் அணுகியது. டெல்லியில் உள்ள மேற்கு டெல்லி தொகுதியிலாவது போட்டியிடுங்கள் என்று கெஞ்சியது. தற்போது அந்த தொகுதி எம்பியாக இருப்பவர் பா.ஜவை சேர்ந்த பர்வேஷ் வர்மா. இவர் நின்றால் தோல்வி உறுதி. அங்கு ஆம் ஆத்மி பலம் அதிகம். சேவாக் நின்றால் ஜெயிக்கலாம் என்பது பா.ஜ எண்ணம். இந்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது. தெறித்து ஓடிவிட்டார் சேவாக். ‘’தேர்தலா?, என்னால் முடியாது. என்ன விட்ருங்க’’ என்று கூறிவிட்டார்.ஆனால், காம்பீர் தேர்தல் ஆசையுடன் இருக்கிறார். டிவிட்டர் வலைதளங்களில் ஆம் ஆத்மி, காங்கிரசை கடுமையாக விமர்சித்து பா.ஜவுக்கு பலம் கூட்டுகிறார். தனிப்பட்ட மக்கள்சந்திப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு டெல்லியில் ஏதாவது ஒரு தொகுதியில் பா.ஜ வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வரை கன்பார்ம் இல்லை. இதனால் இலவுகாத்த கிளியாக வலம் வருகிறார்.  இதுபற்றி காம்பீர் கூறுகையில், டெல்லியில் எனக்கு தொகுதி ஒதுக்கியதாக பரவிய தகவல் பற்றி எதுவும் தெரியாது. இப்போது வரை இந்த தகவல் வதந்திதான்’ என்கிறார் சோகத்துடன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chita ,BJP Sehwag , Delhi, Sevak, Gambhir, BJP
× RELATED கொரோனா பாதித்தவர்களை சித்த...