பீகாரில் லாலு பிரசாரமா? நிதீஷ், பாஜக கலக்கம்

பீ காரில் தேர்தல் என்றாலே ராஷ்டீரிய ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலுவின் பிரசாரம் தனியாக தெரியும். அவரது பேச்சு பாமர மக்களையும் கவரும் வகையில் இருக்கும்.  கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 10ம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில் தனக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டார்.

ஆனால் அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. ராஜேந்திரா இன்ஸ்டியூட் மருத்துவமனை மூலம் உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கோரி லாலு மனுத்தாக்கல் செய்திருந்தார். லாலு பிரசாத் சார்பில், அவரது வழக்கறிஞர், கபில் சிபில், அவரது உடல் நலத்தை மேற்கோள்காட்டி ஜாமீன் வழங்க வேண்டுமென கோரியிருந்தார்.இந்த மனுக்கள் மீது சிபிஐ இரண்டு வாரங்களுக்குள் உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்து லல்லு முக்கிய ெபாதுக்கூட்டங்களில் பங்கேற்றால், அவரது பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இதன்மூலம் வாக்குகளை கவருவார். இதனால் அனுதாப அலை ஏற்படும் என்பதால் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என ஆர்ஜேடி தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu Prasad ,Bihar ,Nitish ,BJP , Bee Gauch, Apel, Lolu's Propaganda
× RELATED மகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு...