×

சார்....போஸ்ட்ஆஹா...இது நமக்கு தோணலையே...

மைசூரு-குடகு மக்களவை தொகுதியின் பாஜ எம்பியாக இருப்பவர் பிரதாப் சிம்ஹா. இவர் பிரசாரம் செய்யும் பாணியே தனி. எப்படி தெரியுமா? வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்க இவர் அலட்டிக்கொள்வதே இல்லை. தன் தொகுதியில் உள்ள எல்லா தபால்காரர்களையும் நேரில் பார்த்து ‘டீல்’ போட்டார். தபால்துறை  அதிகாரிகளிடமும் இவர் பேசி சம்மதிக்க வைத்து விட்டார்.
 அப்புறம் என்ன? சார் போஸ்ட் என்று வீட்டுக்கு வீடு போய் தபால்காரர்கள், இவர் சிம்ஹாவின் பிரசார புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். உடல் உழைப்பும் மிச்சம்; செலவும் மிச்சம். முதல் கட்டமாக  50 ஆயிரம்  பிரசார புத்தகத்தை அச்சிட்டு தபால்காரர்களிடம் தந்து விட்டார். வீட்டுக்குவீடு இவர் பிரசார  புத்தகம் போய் விழுந்து விட்டது. பிரதாப் சிம்ஹாவின் நூதன பிரசாரத்தை  கேள்விப்பட்ட பாஜவில் இருக்கும் சில நிர்வாகிகள் பய புள்ள எப்படியெல்லாம் யோசிக்குது என்று அதிர்ந்துவிட்டார்கள். ‘இதென்ன அக்கிரமம்; தபால் துறைக்கு வேலையில்லை என்பதால் இப்படியெல்லாம் பயன்படுத்துவதா? பாஜவின் அதிகார துஷ்பிரயோகம் , அவர்களின் வேட்பாளர்கள் வரை பரவிக்கிடக்கிறது. இதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தான் தட்டிக்கேட்க வேண்டும்’ என்று  கர்நாடக காங்கிரஸ்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விழிப்புணர்வு கமிட்டி தலைவர்  சிவராமு புலம்பித்தவிக்கிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sir , Mysore, Pratap Simha
× RELATED ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய...