×

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் - திமுக நேரடி மோதல்

புதுவை, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்- திமுக  இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுடன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் ஏப். 18ம்தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் இங்கு என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றதோடு, அக்கட்சி தனது  எம்எல்ஏ பதவி தகுதி நீக்கத்தால் இழந்துள்ளதால் மீண்டும் அங்கு போட்டியிட்டு  சட்டமன்ற உறுப்பினரை பெற முனைப்பு காட்டி வருகிறது.

 காங்கிரஸ்-திமுக  கூட்டணியில் 2016 தேர்தலில் திமுக போட்டியிட்டது. தற்போது இந்த  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி  அங்கு 2வது இடம் பெற்றிருந்ததால் இடைத்தேர்தலிலும் போட்டியிட விருப்பம்  தெரிவித்திருந்தது.இதனிடையே சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்ேபாது முதல்வர் நாராயணசாமி,  தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அறிவித்தார்.இந்தநிலையில் தட்டாஞ்சாவடியில் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ள  திமுக, என்ஆர் காங்கிரசுக்கு களத்தில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும்  வகையில் புதிய வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன. அதேநேரத்தில்  என்ஆர் காங்கிரசில் அசோக் ஆனந்த் குடும்பத்தில் இருந்து யாராவது  போட்டியிடலாம் என்ற தகவல் பரவுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில்  தனக்கு அங்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் அரசு  கொறடாவும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகின்றன. இதற்கிடையே தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில்  தனித்து போட்டியிடும் முடிவில் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி  மய்யமும் தயாராகி வருகின்றன. அக்கட்சியும் தனது வேட்பாளரை விரைவில்  அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், தொகுதி இடைத்தேர்தல் களம்  சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NR Congress ,conflict ,DMK ,Dattanadavai , Dattanjavadi, by-election, NR Congress, DMK
× RELATED வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல்