×

அரசு ஊழியர், தொழிலதிபர் வீடுகளில் 17 சவரன் நகை, 3 லட்சம் கொள்ளை: ஆவடி, வேப்பேரியில் துணிகரம்

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், மாடர்ன் சிட்டி 3வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் லோகேஷ் (35), மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி திவ்யபாரதி (30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 9ம் தேதி, திவ்யபாரதி, தனது மகனுடன் பெற்றோர் வீடான திருத்தணிக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்காக தொழிற்சாலைக்கு சென்ற லோகேஷ், வேலை முடிந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ₹3 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. இவது பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம் (28) என்பவர் வீட்டின் பூட்டையும் உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தீபக் (41), தொழிலதிபரான இவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுனைனா (37), வீட்டில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது, 16 சவரன் நகை மாயமாகி இருந்தது. விசாரணையில், வேலைக்கார பெண் நிரோஷா (எ) ரோஜா (27), கடந்த 2 ஆண்டுகளாக 16 சவரன் நகைகளை திருடி அதை புதிய நகைகளாக மாற்றி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 16 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery ,Savant ,burglars ,businessman ,Avadi ,houses ,Veerayari , government employee ,businessman',Avadi,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...