×

நச்னு 4 கேள்வி : இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஓட்டமா? : வெற்றிவேல் அமமுக செய்தி தொடர்பாளர்

1 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் காசு இல்லாததால் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறுகிறார்களாமே?

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள், காசு இல்லாததால் நாங்கள் தேர்தலில் போட்டிட மாட்டோம் என்று யாரும் இதுவரையில் தலைமையிடத்தில் கூறவில்லை. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எம்.பி தேர்தலில் ஒருசிலரும், பெரும்பாலானோர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவார்கள்.

2 பெரம்பூர் தொகுதியில் இந்தமுறை நீங்கள் போட்டியிட மாட்டீர்கள் என்ற தகவல் பரவி வருகிறதே?

கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடப்பேன். தேர்தலில் தலைமை போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். நான் எப்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறினேன்? எந்த முடிவு எடுத்தாலும் அது கட்சியின் முடிவாக தான் இருக்கும். அதற்கு கட்டுப்பட்டு தான் நான் நடப்பேன்.

3 டிடிவி.தினகரனுக்கும், உங்களுக்கும் சமீப காலமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கட்சி சார்பான நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை, எந்த செயல்பாடும் இல்லை, அதனாலேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்காமல் தவிர்ப்பதாக கூறப்படுகிறதே?

அப்படி எல்லாம் ஒன்று இல்லைங்க. தற்போது கூட ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துவிட்டு தான் வந்தேன். அவசியம் ஏற்பட்டால் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அண்ணன் எங்கே செல்கிறாரோ அவருடன் தான் செல்கிறேன். ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பெரம்பூரில் எவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தை கூட்டினேன் தெரியுமா? பூத் கமிட்டி பணியை தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன். 100 சதவீதம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

4 அமமுக நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கையில் தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் தயார் செய்வதில் தொடர் இழுபறி நிலவி வருவதாக கூறப்படுகிறதே?
தொடர்ந்து கட்சி பணிகள் தான் போய்க்கொண்டிருக்கிறது. டிடிவி.தினகரன் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பை வெளியிட உள்ளார். யாரும் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : race run ,spokesperson ,Amateur , Speaker, winner, 4 question
× RELATED காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்