×

சம்பிரதாயத்துக்காக வெளியிடும் தேர்தல் அறிக்கை அல்ல : ராமதாஸ் பேட்டி

சென்னை: வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல்ல, தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல், மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் அது எதிரொலிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழச்சி சென்னையில் நேற்று நடந்தது. ராமதாஸ் வெளியிட பெண் பத்திரிக்கையாளர் பெற்றுக் கொண்டார். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் உள்ள சுயமரியாதை திருமண சட்டம் இந்திய அளவில் சட்டமாக்கப்படும்,  நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன.தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ராமதாஸ், அன்புமணி கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Ramadoss , Tradition, [election statement, Ramadoss's interview
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...