×

மார்ச் 21ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி

டெல்லி : மார்ச் 21ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர் வணிக கூட்டமைப்பு தலைவர் ராஜாசந்திரசேகரன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூடல்


 பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் அதனை வெடிப்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. குறிப்பாக, பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தக்கூடாது என்றும், சரவெடி தயாரிக்க கூடாது மற்றும் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தது. இதனால் சிவகாசியில் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி

இதையடுத்து நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுசூழல் ஆய்வு கழகம் பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லியல் மத்திய தொழில்துறை கூடுதல் செயலர் ஹைலேந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நீரி வகுத்துள்ள பார்முலாக்களின் அடிப்படையில்லேயே பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் நீரியின் லோகோ மற்றும் QR கோடு இடம்பெற்று இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நீரியின் லோகோ மற்றும் QR கோடு இல்லாத பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பட்டாசு உற்பத்தியாளர் வணிக கூட்டமைப்பு தலைவர் ராஜாசந்திரசேகரன், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது மார்ச் 21ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் மார்ச் 30ம் தேதி முதல் முழுமையாக பட்டாசு உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Union Government , Green Cracker Production, Central Government, Supreme Court
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...