×

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா, இரும்பு தடுப்பு அமைக்கும் பணி தீவிரம் : பக்தர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட்

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதிக்க 20 கி.மீ., தூரத்துக்கு இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் இக்கோயில் குண்டம் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து விரதம் இ ருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். லட்சக்கணக்கில் பக்தர்கள் தீ மிதிப்பதால் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் தீ மிதிக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து நடப்பது எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு. இந்த ஆண்டு திருவிழா கடந்த 4 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதன்பின், அம்மன் சப்பரத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடந்தது. கடந்த 12ம் தேதி இரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் குண்டம் விழா நடைபெற உள்ளது. இந் நிலையில், பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்பு குண்டம் இறங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்க இரும்பு தடுப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. 20 கி.மீ., தூரத்திற்கு இரும்பினால் ஆன தடுப்பு கட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் சதுர அடியில் தீப்பிடிக்காத பந்தல் அமைக்கும் பணியும், குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே தற்காலிக தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தடுப்புகள் சவுக்கு குச்சிகளால் கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக இரும்பினால் ஆன தடுப்புகள் அமைக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pannari Amman Kundam Festival ,Devotees , Bannari Amman,festival, devotees
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...