×

வருசநாடு அருகே சோலார் விளக்குகள் பழுதால் இருளில் சிக்கிய மலைக்கிராமம் : மாணவ, மாணவியர் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே சோலார் விளக்கு பழுதால் மலைக்கிராமம் இருளில் சிக்கியுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, மொம்மராஜபுரம், இந்திராநகர், கீழபொம்மராஜபுரம், குழிக்காடு, நொச்சிஓடை உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் இந்த சோலார் விளக்குகள் பழுதானது. அவற்றை சரி செய்யாமல் உள்ளதால், மலைக்கிராம மக்கள் இரவு வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். அத்துடன் பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் இருளால் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தியை பயன்படுத்தி படித்து வருகின்றனர்.

அரசரடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கூறுகையில், நாங்கள் மூன்று தலைமுறையாக இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எங்களை வெளியேற்ற வேண்டும் என வனத்துறை துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சோலார் விளக்குகளும் பழுதடைந்து விட்டது. மேலும் மேகமலை ஊராட்சிக்கு அரசாங்கத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்பு  சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு பின் அமைக்கவில்லை.

ஏற்கனவே, அமைக்க சோலார் விளக்குகள் பழுதடைந்து விட்டன. இதனால், இரவு நேரங்களில் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இருளில் பலர் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலைக்கிராம மக்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sallar ,lighthouse ,Wanadanadi , Vadasanad, Solar lights, Mountain
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...