×

தேர்தல் அறிவிப்பு எதிரொலி : அரசியல் கட்சிகளின் கொடிகள், பேட்ஜ் தயாரிக்கும் பணி மும்மரம்

புதுக்கோட்டை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்புலர்கள், தலைவர்கள் படம் போட்ட பேட்ஜ்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியில் புதுக்கோட்டையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் ஏப்பரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி ஏற்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் கொடிகள், மப்புலர்கள், தலைவர்கள் படம் போட்ட பேட்ஜ்கள் தயாரிக்கும் பணிகள் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் அனைத்து வைகையான கொடிகளும், பேட்சுகளும், பப்புலர்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தரத்திற்கு ஏற்றார்போல் மப்புலர்கள் விலை ரூ.60 முதல் ரூ.100 வரை நிர்னையம் செய்யப்பட்டுள்ளது. இதபோல் கார்களுக்கு பயன்படுத்தப்படும் கொடிகள் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கட்சிகளின் கொடிகள் ரூ.14 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கொடிகள், மப்புலர்கள் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்லும்போது கட்சியினருக்கு வழங்குவார்கள் என்பதால் அதனை தயாரிக்கும் பணிகளில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து கொடி தயாரித்து விற்பனை செய்யும் குமார் கூறியதாவது: நாங்கள் ஆண்டு முழுவதும் தேவைக்கு ஏற்றார் போல் கட்சிகளின் கொடிகள், மப்புலர்கள், தலைவர்கள் படம் போட்ட பேட்ஜ்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் மற்ற நாட்களைவிட கட்சிகளுக்கு தேவை அதிகமாக இருக்கும் என்பதால் நாங்கள் அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் தயாரிக்கும் அனைத்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது ஒன்று இரண்டு ஆடர்கள் வந்து கொண்டு இருக்கிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவித்தபிறகு  வரும் 25ம் தேதிக்கு மேல் மப்புலர், கொடிகள் விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்கிறோம். ஆர்டர் வரும்போது காலதாமதப்படுத்தாமல் உடனே வழங்க நாங்கள் அனைத்து பொருட்களையும் தற்போதே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,election announcement ,parties , Election,flags, badge
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்