×

பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் பியான்கா, எலினா பெடரர், நடால் காலிறுதிக்கு முன்னேறினர்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி  பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின்  பியான்கா, உக்ரைனின் எலினா ஆகியோர் அரையிறுதிக்கும்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  சுவிட்சர்லாந்தின் பெடரர், ஸ்பெயினின் நடால் ஆகியோர் காலிறுதிக்கும் முன்னேறினர் அமெரிக்காவின்  இண்டியன் வெல்சில்  பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது.  பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல்  காலிறுதிப் போட்டியில்  செக் குடியரசின் மார்கெட்டா வோண்டர்ய்சோவா,   உக்ரைனின்  எலினா ஸ்விடோலினா ஆகியோர் மோதினர்.  உலகின் நெம்பர் டூ  வீராங்கனை  சிமோனா  ஹாலெப்பை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கிய மார்கெட்டா  6-4 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் அடுத்து  எலினா  வேகம் காட்ட 2, 3வது செட்களை 4-6, 4-6  என இழந்தார் மார்கெட்டா.  அதனால்  2-1 என்ற கணக்கில் எலினா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல்  2வது காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கர்பினி முகுருசா, கனடாவின்  பியான்கா  ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் மோதினார். இளம் வீராங்கனை பியான்கா வேகதை–்தை தாக்கு  பிடிக்க முடியாமல்  கார்பினி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார்.  பதினெட்டு வயதான பியான்கா சர்வதேச போட்டி ஒன்றில் அரையிறுதிக்கு  முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். சுவிட்சர்லாந்து வீராங்கனை  பெலிண்டா பென்சிக் - செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவின்  வீனஸ் வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மோதும் 3, 4வது  காலிறுதிப் ேபாட்டிகளின் முடிவுகள் இன்று காலை தெரிய வரும்.

ஆண்கள்  ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.  முதல்  காலிறுதியில் மிலோஸ் ரோனிக்(கனடா) -  மியோமிர் கெமானோவிக்(செர்பியா) 2வது  காலியிறுதியில் ஹூபர்ட் ஹர்காக்ஸ்(போலாந்து) - ேராஜர்  பெடரர்(சுவிட்சர்லாந்து) ஆகியோர் விளையாட உள்ளனர். அதேபோல் 3வது  காலியிறுதியில்  கெயின் மோன்பில்ஸ்(பிரான்சு) - டொமினிக் தயிம்(ஆஸ்திரியா),  4வது காலியிறுதியில்  காரென்  காச்சனோவ்(ரஷ்யா) - ராபேல் நடால்(ஸ்பெயின்)  ஆகியோர் மோத உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : semifinals ,BNP Paribu Open ,Bianca ,Elena Federer ,quarterfinals ,Nadal , PNB Paribu Open semi-final, Bianca, Elena Federer, Nadal
× RELATED அப்பாடா... அரையிறுதியில் நடால்