×

மோடி ஜி, இனி வேண்டாம் ஜி: பாஜ எம்பி சத்ருகன் சின்கா டிவீட்

பாட்னா: நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கான, புதிய, சிறந்த தலைமை வருவதற்கான சரியான நேரம் இது என பாஜ அதிருப்தி எம்பி சத்ருகன் சின்கா விமர்சித்துள்ளார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் சத்ருகன் சின்கா. இவர் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து பாஜவில் இருந்து வருகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சத்ருகன் சின்கா அமைச்சராக இருந்தார். இரண்டாவது முறையாக பாட்னா சாகிப் எம்பியாக இருந்து வருகிறார். இவர் பிரதமர் மோடியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஆளும் பாஜ கட்சியை நேரடியாக விமர்சனம் செய்வது மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வரும் சத்ருகன் சின்கா பாஜவின் அதிருப்தி எம்பியாக கருதப்படுகிறார்.

பாஜவில் இருந்து வெளியேறவுள்ள எம்பி சத்ருகன் சின்கா, அடுத்த வாரம் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டத்தில் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்அவர் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: 5 ஆண்டுக்கால ஆட்சியில் ஒருமுறையாவது பத்திரிக்கையாளர்களை நீங்கள் சந்தித்து உண்டா? ஜனநாயக உலகில் 5 ஆண்டுகால ஆட்சியின்போது கேள்வி மற்றும் பதில் கூட்டத்தொடரை சந்திக்காத ஒரே பிரதமர் என வரலாற்றில் நீங்கள் பின்தள்ளப்படுவீர்கள். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆட்சிமாற்றத்துக்கான சரியான தருணம் வந்துவிட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா?

உங்களது அனைத்து கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற பக்கங்களுடன் நீங்கள் வெளியே வரவேண்டும். கடந்த ஒரு வாரத்தில் உத்தரப் பிரதேசம், பனாரஸ் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் 150 திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். தொழில்நுட்ப ரீதியாக பேசுதல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறலாம். ஆனால் இவையெல்லாம் மிக, மிக சிறிய மற்றும் தாமதமான பொய்கள் என்பது நிச்சயமாக தெரிகிறது. நீங்கள் பார்க்கும் லண்டன், நீங்கள் பேசும் டோக்கியோ மனோபாவத்துக்கு வாழ்த்துக்கள் என அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். சத்ருகன் சின்கா காங்கிரஸ் அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜவும் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shatrughan Sinha , Modi G, Bjp MP Shatrughan Sinha
× RELATED அசன்சோல் இடைத்தேர்தலில் சத்ருகன்...